“இன்றைய சிந்தனை BY : ANAS”
இன்றைய சிந்தனை
“இன்றைய சிந்தனை” செயலி தொடர்பான உங்களது கருத்துக்கள் send me an e-mail to iaanas93@live.com
காலம் காலமாய் கவி படைக்க நான் இங்கு வார்த்தைகள் தேடி கோர்த்தேன்
நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தற்காலிக நன்மைகளை நாடுவது தலை சிறந்த முட்டாள்தனம்.
விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும்.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை
ஓர் இலட்சியம் உங்களை ஆட்கொள்ளும்போது ஒரு மகத்தான திட்டத்தில் நீங்கள் ஈடுபடும்போது உங்கள் எண்ணங்களின் குறுகிய எல்லைகள் உடைகின்றன.
உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
சான்றோருடைய வாழ்க்கை வரலாறுகள் அவர்களைப்போல் நாமும் ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன.
எதிர்காலம் குறித்த கனவு, அதை அடைவதற்கான உழைப்பு இரண்டும் சேர்ந்தால் அதுதான் வெற்றிக் கூட்டணி.
ONline Tamil Lyrics (By : Anas)
துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்.
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உங்களை விரும்புவன்; நண்பன்.
காயம்படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.
திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.
By :- Anas